ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி வடமாகாண மக்களின் விடிவெள்ளி!
Posted on:
2017-01-09 15:57:54
ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி வடமாகாண மக்களின் விடிவெள்ளி!
RAJEEVAN JEYACHANDRAMOORTHY·TUESDAY, 13 DECEMBER 201673 reads
எட்டாவது ஆண்டில் கால்பதிக்கும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி தொடர்பான பார்வை!
இலங்கையின் வடக்கு மாகாண மாணவர்களுக்கும் மக்களுக்கும் சிறந்த முறையில் கல்விச் சேவையாற்றி வருகின்றது ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி!
12.12.2009 அன்று யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பித்த போது சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 6 பேர்.
அன்று தொடங்கி இன்று வரை ஓய்வொழிச்சல் இன்றி 100 இற்கும் மேற்பட்ட 6 மாதங்கள் கொண்ட ஆங்கில டிப்ளோமா பாடநெறிகளைப் பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளது ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி.
பிரதானமாக சனி/ஞாயிறு தினங்களில் நடைபெறும் ஆங்கிலப் பாடநெறிகளை நடாத்திய 7 வருட காலப்பகுதியில் ஏராளமான சாதனங்களை செய்துள்ளது இந்த ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி.
நாட்டின் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் படையெடுத்து ஆங்கில மொழியினைக் கற்றுவருகின்றார்கள். தற்போது கொழும்பு, புத்தளம், அனுராதபுரம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து கூட மாணவர்கள் கற்றுவருவது ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.
மாணவர்கள் ஆங்கில மொழியில் புலமைய அடையும் அதே நேரத்தில் தலைமத்துவப் பயிற்சிகள், நேர்முகத்தேர்வுக்கான பயிற்சிகள், அரசியல், சமூக, கலாசார, விஞ்ஞான ரீதியான விடயங்களிலும் மாணவர்கள் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
ஆங்கிலக் கல்விக்காக முழுமையாக இயங்கும் ஒரேயொரு நிறுவனமாக வடக்கு மாகாண மக்களின் ஆங்கிலக் கல்வித் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இரண்டு மாடிகளில் இயக்கிவரும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி
அங்கு வரும் மாணவர்களை பல்வேறு வழிகளில் புடம்போட்டு வருகிறது.
இன்றைய நவீன உலகில் மொழியறிவு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது. போதிய மொழி அறிவின்மையால் நாம் அன்றாடம் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இனநல்லுறவுக்கு மொழி அவசியமானது. இந்த நாட்டில் மும்மொழிக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கை மையமாகக் கொண்டே நாம் இந்தக் கல்லூரியினை 2009 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சங்கானை நகரிலே ஆரம்பித்தோம். நாட்டின் சகல பிரதேச மாணவர்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கிலே எமது கல்லூரியை யாழ் நகரிற்கு எமது கல்லூரியை மாற்றியமைத்தோம். இந்த ஆங்கிலக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட மூன்று வருடங்களின் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியாக நிறுவனமயப்படுத்தப்பட்டது.
நாங்கள் இலங்கை மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு Tertiary And Vocational Education Commission, University of Cambridge ESOL BRITISH COUNCIL SRILANKA, CITY & GUILDS(U.K) CSS COMPUTER EDUCATION (INDIA) TOIEC (U.K), COSS போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டு செயலாற்றி வருவதோடு அந்த நிறுவனங்களின் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றோம். எமது கல்லூரியிலே இதுவரை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே ஆங்கில மொழியினை பூரணமாக கதைக்கக்கூடியவர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். பலநூறு மாணவர்கள் எமது கல்லூரியிலே பெற்ற சான்றிதழ்களைக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நன்மைகளைப் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றனர்.
எமது ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியிலே இன, மத பேதமற்ற வகையில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், என மூவினத்தவரும் கற்று வருவது பெருமைப்படக்கூடிய விடயம் மட்டுமல்லது இது இன, மத நல்லினக்கத்திற்கும் எடுத்துக்காட்டாகும். வடக்கு மாகாணத்திலே மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம், பச்சிளைப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இருந்தும் பலநூறு மாணவர்கள் ஆங்கில மொழி, சிங்கள மொழி, வெளிநாட்டு மொழிகள், கணனிப்பாடநெறிகள் போன்ற பாடநெறிகளைப் பயின்று வருகின்றனர். மேலும் வடமாகாணத்தை விட கிழக்கு மாகாணம், மலையகம், தென், மேல் மகாணங்களில் இருந்தும் பல மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள்.
எமது நிறுவனத்திலே பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், வங்கியியலாளர்கள், தாதி உத்தியோகஸ்தர்கள், பணி புரிவோர், வெளிநொடு செல்வோர், O/L, A/L பரீட்சை எழுதிய மாணவர்கள் மற்றும் 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், பெண்கள் எனப் பலரும் கற்றுவருவதுடன் மொழியில் புலமை பெற்றவர்களாகவும் திகழ்கின்றார்கள்.
நல்ல சூழலில் அமைதியான இடத்தில் அமைந்துள்ள எமது நிறுவனம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழிக்கல்வியுடன் சமயம், ஆன்மீகம், தலைமைத்துவம், சகோதரத்துவம், அரசியல், அன்பு, பாசம், பொதுஅறிவு பொன்ற விடயங்களைப் போதித்து சமநிலை மனிதர்களாக எதையும் சாதிக்கலாம் என்ற இலட்சியத்துடன் மாணவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள்.
நாட்டிலே முதற்தர ஆங்கில மொழிப்பயிற்சி கல்வி நிறுவனமாக இந்தக் கல்லூரி விளங்குகின்றது. இதற்கு சாட்சியாக இன்று பலநூறு மாணவர்கள் ஆங்கில டிப்ளோமா சான்றிதல்களையும் விருதுகளையும் பெற்றுள்ளனர்.
எமது கல்லூரியானது லாபநோக்கை கொண்டியங்காமல் கல்விச் சேவையை மையமாக் கொண்டே செயற்பட்டு வருகின்றது. வசதி குறைந்த மாணவர்களுக்கு நாம் கை கொடுத்து வருகின்றோம்.
இதற்காக நாம் பிரதேசங்கிளில் இருக்கும் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், மதப் பெரியவர்கள், மற்றும் துறைசார்ந்த பலரையும் இணைத்து “சமூக மறுவாழ்வுக்கான அமைப்பு” என்ற அரச சார்பற்ற நிறுவனமொன்றை நிறுவிப் பணியாற்றி வருகின்றோம்.
மேலும் சமயம், கவின்கலை, இலக்கியம், சமாதானம், எழுத்துத்துறை, போன்ற துறைகளில் புலமை மிக்கவர்களை இனம்கண்டு அவர்களுக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்தும் வருகின்றோம்.
எனவே இவ்வாறான பல்வேறு பட்ட சேவைகள் புரியும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி வடக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதம் ஆகும்.
தனியார் நிறுவனமொன்று தளம்பல் நிலையின்றி இப்படியான கல்லூரியை நடாத்துவதென்பது சவால்கள் நிறைந்த காரியமாகும்.
மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை குறிகோளாகக் கொண்டு இயங்கி வருகின்றோம். இங்கு வருகை தந்துள்ள பெரியேர்களே எமது நிறுவனம் தங்குதடையின்றி கல்விச் சேவையினைத் தொடர தங்களின் ஆதரவினைத் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் அனைவரினதும் ஆதரவு எம் மாணவர்களின் கல்வி விடிவிற்கும், உயர்ச்சிக்கும் கைகொடுத்து உதவும்.
E-CITY COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT
N0.372D, POINTPEDRO ROAD, ANAIPANTHY, JAFFNA.
TEL: 0212217106 / 0212217898 / 0774924166 / 0770610271 / 0773400418
WEB: ecitycollege.lk EMAIL: [email protected] FACEBOOK: https://www.facebook.com/Ecitycollege/